7 பிப்ரவரி 2022-ன் புதுப்பித்தலில், PEDro உள்ளடக்கங்களின் பகுப்பாய்வு இந்த பக்கத்தில் வழங்கப்படுகிறது. இந்த தரவுகள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். எனவே அடுத்த புதுப்பித்தல் பிப்ரவரி 2023-ல் திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7, 2022 அன்று, PEDro-வானது 53,801 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களின் அறிக்கைகளைக். கொண்டிருந்தது. 41,362 சோதனைகள், 11,737 திறனாய்வுகள், மற்றும் 702 வழிகாட்டல்கள் இருந்தன. கீழேயுள்ள வரைபடம், ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டல்களின் ஒன்று திரண்ட எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
பிசியோதெரபியின் அனைத்து பகுதிகளுக்குமான சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டல்களின் அறிக்கைகளை PEDro வகைப்படுத்துகிறது. பிசியோதெரபியின் ஒவ்வொரு பகுதிக்குமான சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டல்களின் எண்ணிக்கையை கீழே உள்ள வரைபடம் எடுத்துக்காட்டுகிறது. தசையெலும்பு கூட்டமைப்பு மற்றும் இதய-சுவாசவியல் சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டல்கள் பெரிய அளவிலான எண்ணிக்கையில் இருந்தது. இந்த வரைபடம், முழுமையான தரவை கொண்ட 53,159 ஆவணங்களின் குறியீட்டை அடிப்படையாக கொண்டது (642 ஆவணங்கள் செயலாக்கத்தில் உள்ளன, எனவே இன்னும் பிசியோதெரபி பகுதியில் குறியீடு செய்யப்படவில்லை) என்பதை நினைவில் கொள்ளவும். ஒவ்வொரு சோதனை, திறனாய்வு மற்றும் வழிகாட்டலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிசியோதெரபி பகுதியில் குறியீடு செய்யப்படலாம், அதனால் இந்த வரைபடத்தில் உள்ள அறிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 53,159-க்கும் மேலே சேர்க்கும்.
PEDro-வில் வகைப்படுத்தப்பட்டுள்ள சோதனைகளின் அறிக்கைகள், “PEDro அளவுக்கோல்” என்ற ஒரு சரி பார்க்கும் குறிப்பு பட்டியலை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. மருத்துவ ரீதியாக முடிவெடுத்தலை தெரிவிக்க, உள்ளான நேர்மை மற்றும் பொருள் விளக்கம் செய்துக்கொள்ள போதுமான புள்ளிவிவர தகவல்களை கொண்டுள்ள சோதனைகளை PEDro பயனர்கள் விரைவாக அடையாளம் காண உதவ PEDro அளவுக்கோல் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு சோதனை அறிக்கைக்கும் 0 முதல் 10 வரையிலான மதிப்பெண் வரிசையில், ஒரு மொத்தமான மதிப்பெண் அளிக்கப்படுகிறது. கீழே உள்ள வரைபடம், ஒவ்வொரு மொத்த மதிப்பெண் பெற்ற சோதனை அறிக்கைகளின் எண்ணிகையை எடுத்துக்காட்டுகிறது. சராசரி PEDro மொத்த மதிப்பெண் 1.6 நியமவிலகலுடன் 5.2 ஆகும். 39% சோதனை அறிக்கைகள், PEDro அளவுக்கோலில் ≥ 6/10 மதிப்பெண் பெற்று மிதமான முதல் உயர் தரமுடையதாய் இருந்தன, இந்த வரைபடம் முழுமையான தரவை கொண்ட 40,720 ஆவணங்களின் குறியீட்டை அடிப்படையாக கொண்டது (642 சோதனை ஆவணங்கள் செயலாக்கத்தில் உள்ளன, எனவே இன்னும் PEDro அளவுக்கோல் கொண்டு மதிப்பீடு செய்யப்படவில்லை) என்பதை நினைவில் கொள்ளவும்.
PEDro அளவுக்கோலின் ஒவ்வொரு உருப்படியையும் திருப்தி செய்த சோதனை அறிக்கைகளின் சதவீதத்தை கீழே உள்ள வரைபடம் விளக்குகிறது. பெரும்பாலான சோதனைகள் சீரற்ற ஒதுக்கீட்டை (97%) பயன்படுத்தின, குழுக்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் பற்றிய அறிக்கை (94%), மற்றும் சராசரி மற்றும் வேறுபாட்டு தரவு அறிக்கை (91%). சில சோதனைகள், ஆய்வு மக்களை ஒதுக்கீட்டிற்கு மறைத்தன (6%), அல்லது தெரபிஸ்ட்களை (1%), மற்றும் மறைக்கப்பட்ட ஒதுக்கீட்டை பயன்படுத்தின (28%), மற்றும் சிகிச்சையளிக்கும் நோக்கம் கொண்ட பகுப்பாய்வை பயன்படுத்தின (28%). இந்த வரைபடம் முழுமையான தரவு கொண்ட 40,720 ஆவணங்களின் குறியீட்டை அடிப்படையாக கொண்டது (642 ஆவணங்கள் செயலாக்கத்தில் உள்ளன, எனவே இன்னும் PEDro அளவுக் கோலை பயன்படுத்தி குறியீடு செய்யப்படவில்லை) என்பதை நினைவில் கொள்ளவும்.
PEDro-வில் சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டல்களை வகைப்படுத்த எந்த மொழி கட்டுப்பாடும் இல்லை.கீழே உள்ள வரைபடம் வெளியீட்டு மொழி அடிப்படையில் உள்ள ஆவணங்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மொத்தம் 28 வெவ்வேறு மொழிகளில், ஆவணங்கள் வெளியிடப்பட்டன. மிக அதிகமான வெளியீடுகளின் மொழியாக ஆங்கிலம் இருந்தது (91.5% பதிவுகள்), அதனை தொடர்ந்து சீனம் (4.1%), ஜெர்மன் (1.0%) மற்றும் ஸ்பெயின் (0.7%) ஆகியவையாகும்.
2021-ல், PEDro-வானது 4,247,892 மருத்துவ கேள்விகளுக்கு பதிலளிக்க பயன்படுத்தப்பட்டது. இதென்னவென்றால், 2021-ல், ஒவ்வொரு 8 7ினாடிகளுக்கு ஒரு புதிய தேடல் துவங்கியது. கீழே உள்ள வரைபடம், 2021-ல் ஒவ்வொரு மாதமும் செய்யப்பட்ட PEDro தேடல்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
PEDro பயனர்கள் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றனர். மிக அதிக பயன்பாடு கொண்ட ஐந்து நாடுகள்:
- 25% பிரேசில்
- 7% ஸ்பெயின்
- 7% ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- 6% ஆஸ்திரேலியா
- 5% பிரான்ஸ்
2021-ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட PEDro தேடல்களின் வண்ண வரைபடம் கீழே விளக்கப்பட்டுள்ளது.