இணைப்புகள்

நீங்கள் பயனுள்ளது என்று காணும் தொடர்புடைய இணையத் தளங்களுக்கான இணைப்புகளை இந்த பக்கம் கொண்டுள்ளது. கீழ் கண்டவற்றை முயற்சி செய்து பாருங்கள்:

ஆரோக்கிய பராமரிப்பு ஆதார தரவுத்தளங்கள்

Cochrane Library
காக்ரேன் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் ஆரோக்கிய பராமரிப்பு சிகிச்சை தலையீடுகளின் திறன் பற்றி கிடைக்கக் கூடிய சிறந்த தகவல்களை வழங்குகின்றன. சில நாடுகளில் வசிப்பவர்களுக்கு காக்ரேன் நூலகத்தின் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளின் முழு உரை இலவசமாக கிடைக்கிறது. பிசியோதெரபி தொடர்பான காக்ரேன் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளின் சுருக்கவுரைகள் PEDro தரவுத்தளத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. காக்ரேன் நூலகத்தில் வெளியாகுகின்ற ஆரோக்கியம் தொடர்பான ஆதாரத்தை பரப்புவதற்கு, யுகே காக்குரேன், Evidently Cochrane என்ற ஒரு வலைப்பதிவிடும் இடத்தை தயாரித்துள்ளது. காக்ரேன் இணைவாக்கம் (Cochrane) பற்றிய அதிக தகவலுக்கு, Cochrane முகப்புப் பக்கம், காக்ரேன் ரிஹாபிலிடேஷன் அல்லது காக்ரேன் ஆஸ்திரேலியா போன்ற காக்ரேனின் பக்கங்கள் ஒன்றுக்கு வருகை தரவும்.

National Institute for Health Research (NIHR) Evidence மற்றும் Database of Abstracts of Reviews of Effects (DARE)
NIHR Evidence, 2015-லிருந்து இன்று வரை நடைபெறும் புதிய ஆராய்ச்சிகளின் சுருக்க உரைகளை தயாரிக்கிறது. 2015-க்கு முன்பு, DARE, தரமதிப்பிடப்பட்ட முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளின் தரவுத்தளத்தை தயாரித்தது. PEDro-வில் வரிசைப்படுத்தபட்டுள்ள சில முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் DARE சுருக்க கருத்துரைகளைக் கொண்டுள்ளது. இதற்கான இணைப்புகள் PEDro-வின் விவரமான தேடல் முடிவுகள் பக்கத்தில் கிடைக்கப் பெறும்.

Turning Research into Practice (TRIP) தரவுத்தளம்
மருத்துவத் துறை வாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட உயர் தர முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள், சீரற்ற சோதனைகள் மற்றும் வழிகாட்டல்களின் முழு உரைக்கான நேரடி, மிகை இணைப்பு தொடர்பு வழி.

PubMed
ஒரு பயனர் நட்புடைய, வலை-அடிப்படையிலான Medline இடைமுகம். தடுப்பு, சிகிச்சை, நோய் முன்கணிப்பு, நோய் கண்டறிதல், நோய்க்கான காரணிகள் மற்றும் அதிகமானவற்றின் மேற்கோள்களை Medline-ல் மருத்துவர்கள் கண்டுபிடிக்க உதவ PubMed Clinical Queries வசதியை உள்ளடக்குகிறது.

SUMSearch 2
பயனர்கள் பலதரப்பட்ட மருத்துவ வினாக்கள் பற்றிய உகந்த தேடல்களைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான தேடல் பொறி. SUMSearch 2 PubMed Clinical Queries-க்கு ஒத்ததாகும், ஆனால் இது ஒரு மிக பரந்த இலக்கியத்தை தேடும்.

Joanna Briggs Institute
Joanna Briggs Institute, நர்சிங், மருத்துவம் மற்றும் துணை-ஆரோக்கிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட ஒரு சர்வதேச இணைவாக்கமாக இருக்கிறது. இந்த வலைத்தளம், ஆதாரம் சார்ந்த நடைமுறை சேவைக்கான ஒரு பரந்த அளவிலான தகவல் வளங்களை வழங்குகிறது. இந்த வலைத்தளத்தின் சில பகுதிகளுக்கு சந்தா தேவைப்படும்.

இலவச மருத்துவ ஆய்வு பத்திரிகைகள்
இலவசமாக தகவல் எதுவும் இல்லை என்று யார் கூறினார்? இந்த வலைத்தளம், இலவச மருத்துவ ஆய்வு பத்திரிகைகளை இணைக்கிறது.

குறிப்பிட்ட துறைகளில் ஆதார தரவுத்தளங்கள்

OTseeker
OTseeker, தொழில்சார் சிகிச்சை தொடர்புடைய முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் சீரற்ற சோதனைகளின் சுருக்கவுரைகளைக் கொண்டுள்ளது. சோதனைகள், PEDro அளவுகோலைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள், மருத்துவ தலையீடுகளுக்கான சோதனைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை தீர்மானம் செய்ய உங்களுக்கு உதவுகிறது. குறிப்பு: இந்த தரவுத்தளம் 2017-லிருந்து புதுப்பிக்கப்படவில்லை.

NeuroBITE
NeuroBITE (முந்தி PsycBITE என்றழைக்கப்பட்ட), மூளை சேதம் (Acquired Brain Impairment) விளைவாக நிகழும் உளவியல் பிரச்சினைகளுக்கான அறிவாற்றல், நடத்தை மற்றும் பிற சிகிச்சைகளுக்கான ஆய்வுகளை பட்டியலிடும் ஒரு தரவுத்தளமாக உள்ளது. இந்த தரவுத்தளம், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள், சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், சீரற்று- அல்லாத கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், நோயாளி தொடர் ஆய்வுகள், மற்றும் ஒற்றை-நோயாளி சோதனை வடிவமைப்புகள், கொண்ட ஆய்வு வகைகளை உள்ளடக்கும். சீரற்ற மற்றும் சீரற்று- அல்லாத கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், மாற்றியமைக்கப்பட்ட PEDro அளவுகோலைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. ஒற்றை-நோயாளி சோதனை வடிவமைப்பு கொண்ட ஆய்வுகள் RoBiNTஅளவைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.

speechBITE
SpeechBITE ஸ்பீச் பேதாலஜி நடைமுறை நோக்கில் உள்ள சிகிச்சை தலையீடுகள் கொண்ட ஆய்வுகளை வழங்கும் ஒரு தரவுத்தளமாகும். இந்த தரவுத்தளம், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள், சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், சீரற்று- அல்லாத கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், நோயாளி தொடர் ஆய்வுகள், மற்றும் ஒற்றை-நோயாளி சோதனை வடிவமைப்புகள், கொண்ட ஆய்வு வகைகளை உள்ளடக்கும். சீரற்ற மற்றும் சீரற்று- அல்லாத கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், மாற்றியமைக்கப்பட்ட PEDro அளவுகோலைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.

Research and Training Center on Early Childhood Development
இந்த தரவுத்தளம்,, வளர்ச்சி தாமதங்கள் அல்லது குறைபாடுகள் அபாயம் உள்ள/இருக்கும் சிசுக்கள், குறுநடை குழந்தைகள் மற்றும் பால வயது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்தவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளின் ஆதார தரவுத்தளங்கள்

ஆஸ்திரேலியாவில் ஆரோக்கியத் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் சில சிறந்த தகவல் வள ஆதாரங்கள் உள்ளன. இந்த தளங்கள், காக்ரேன் நூலகத்தின் முழு உரைக்கான ஒற்றை-தள அணுகல், Medline மற்றும் CINAHL, மருத்துவ வழிகாட்டல்களுக்கான OVID அணுகல், மற்றும் அதிகமானவற்றை வழங்குகிறது. தளங்கள் கடவுச்சொல்லால் பாதுகாக்கபட்டுள்ளன. ஆரோக்கியத் துறை ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவு துறைகள் மூலம் கடவுச்சொற்களை பெற்றுக்கொள்ள முடியும். மாநிலம் வாரியான தள முகவரிகள்:

Clinical Practice Guidelines Portal
ஆஸ்திரேலிய ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளில் பயன்படுத்த உருவாக்கப்பட்ட மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களை வரிசைப்படுத்துகிறது.

National Institute for Health and Care Excellence (NICE)
National Health Service (யுனைடட் கிங்டம்) ஊழியர்களுக்கு தரவுத்தள அணுகலை வழங்குகிறது. NICE மருத்துவ வழிமுறை காட்டல்களுக்கான இலவச உலகளாவிய அணுகலும் கிடைக்கப் பெறுகிறது.

ஆதாரம்-சார்ந்த நடைமுறைக்கான தகவல் வளங்கள்

CONSORT விவர அறிக்கை
CONSORT என்பது “Consolidated Standards of Reporting Trials”-க்கான சுருக்கப்பெயர் ஆகும். CONSORT அறிக்கை, சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை அறிக்கையிடுவதற்கான ஒரு ஆதாரம்-சார்ந்த, குறைந்தபட்ச பரிந்துரைகளின் தொகுப்பாகும்.

PRISMA விவர அறிக்கை
PRISMA என்பது “Preferred Reporting Items for முறைப்படுத்தப்பட்ட Reviews and Meta-Analyses”-க்கான சுருக்கப்பெயர் ஆகும். PRISMA விவர அறிக்கை, முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை குறிப்பிடுவதற்கான ஒரு ஆதாரம்-சார்ந்த, குறைந்தபட்ச உருப்படிகளின் தொகுப்பாகும்.

மருத்துவ சோதனைகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளின் பதிவு
மருத்துவ சோதனைகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை பதிவு செய்தல், இரட்டிப்பான முயற்சியை விலக்கி, மற்றும் குறிப்பிட்ட அறிக்கையிடுதல் மற்றும் வெளியீடு சார்ந்த ஒரு தலை சார்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும், மருத்துவ சோதனையை பதிவு செய்தல், ஆய்வு ஆட்சேர்ப்பில் உதவவும், மற்றும் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளுக்கான சோதனைகளை கண்டு பிடிப்பதை எளிதாகவும் ஆக்குகிறது. Pinto et al (2013) பிசியோதெரபி தலையீடுகளுக்கான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் பதிவு மிக குறைவு என்றும் மற்றும் அரிதாக எதிர்கால நோக்கானது என்று எடுத்துக் காட்டியது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, International Society of Physiotherapy Journal Editors (ISPJE) பல ISPJE உறுப்பினர் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்கத்தில் விவரிக்கப்பட்ட வகையில், உறுப்பினர் பத்திரிகைகள் சோதனைகளின் வருங்கால பதிவை ஒரு கொள்கையாக செயலாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மருத்துவ சோதனைகளை இலவசமாக வெளிப்படையாகக் கிடைக்கப் பெறும், மற்றும் மின்னணு முறையில் தேடப்படும் பதிவேடுகளான ClinicalTrials.gov மற்றும் Australian New Zealand Clinical Trial Registry பதிவு செய்ய முடியும். பல் வேறுபட்ட பதிவேடுகளிலுள்ள மருத்துவ சோதனைகளின் தகவலை WHO பதிவேட்டு தேடல் வலை வாசலில் காணலாம். முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளின் பதிவும் இலவசமாக மற்றும் யாவருக்கும் கிடைக்கப் பெறுவதாய் உள்ளது; கிடைக்கப் பெறும் பதிவேடுகளில், Cochrane Library மற்றும் Prospero ஆகியவை அடங்கும்.

PEDro Partnership-யானது, All Trials Registered – All Results Reported என்ற மனுதாரத்தை வழி மொழிகிறது. உங்களின் ஆதரவை சேர்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பின்பற்றவும்.
AllTrials logo

Students 4 Best Evidence
இந்த தளம், ஆதாரம்-சார்ந்த நடைமுறையில் ஆர்வம் கொண்ட மருத்துவ பராமரிப்பு மாணவர்களுக்கான தகவல் வளங்கள் கொண்ட வலைப்பின்னலாக ஆக உள்ளது.

International Centre for Allied Health Evidence (iCAHE)
iCAHE மூலம் பிசியோதெரபி முதல் மருத்துவ கதிரியக்கம் வரையான வரம்பில், ஆதாரம்-சார்ந்த ஆராய்ச்சி களஞ்சியத்தை வழங்குவதன் மூலம் இணை ஆரோக்கிய தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் நோயாளிகளுக்கு அதிக தேவையான தகவல் வளங்களை வழங்குகிறது. இந்த மையம் இணை உடல்நல பிரச்சினைகளில் ஆதாரம்-சார்ந்த தீர்வுகளை தயாரிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது மற்றும் சிகிச்சை உத்திகள், சிறந்த ஆதாரம் மற்றும் இருப்பு ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை என்று உறுதியளிக்கிறது.

EBM கருவிப் பொதி
கனடாவினரால் தயாரிக்கப்பட்ட சில மிகவும் பயனுள்ள கருவிகள்.

Visual Rx
ஒரு சிகிச்சை விளைவின் அளவுக்கான பல்வேறு கணித எண்ணிக்கைகளிலிருந்து (சார்பு அபாயங்கள், முரண்பாடு விகிதங்கள் அல்லது பூரண அபாய குறைப்புகள்) NNTs-ஐ உருவாக்குகிற ஒரு கணிப்பான் ஆகும், மற்றும் உண்மையில் NNTs என்றால் என்ன என்பதைக் காட்சி அம்சமாக (விசுவல்) காண்பதற்கு ஒரு புத்திசாலித்தனமான வழியாகும்.

Oxford Centre for Evidence-Based Medicine
ஆதாரம்-சார்ந்த மருத்துவ மையங்களில் ஒன்றாகும். இந்த தளம் levels of evidence table-ன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைக் கொண்டுள்ளது.

விமர்சன மதிப்பீடு
மருத்துவ பரிசோதனைகளை (அல்லது மற்ற வடிவங்களில் உள்ள மருத்துவ ஆதாரங்கள்) எப்படி வாசிக்கலாம் என்பதற்கான மேற்படியான அறிவுரை வேண்டுமென்றால், முதல் தரமான (இன்றும், நிகரற்ற) CMAJ/JAMA User’s Guides அல்லது ஸ்டீவ் சைமனின் ‘How to read a medical journal article’ போன்றவற்றை நீங்கள் கலந்தாலோசிக்க முடியும். அவற்றை அதிக நேரம் எடுத்து வாசிக்க முடியவில்லை என்றால், சுருக்கமான PEDro தனிமுறைப் பயிற்சிகளை முயற்சித்து பாருங்கள்.

ஆதாரத்தை கண்டுப்பிடித்தல் மற்றும் மதிப்பிடுதல்
HealthKnowledge-க்காக Amanda Burls மற்றும் Anne Brice எழுதிய ஆறு வலைத்தொகுப்புகள் இருக்கிறது. இவை, ஆதாரத்தை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் பின்னர் பயனுள்ள மற்றும் திறமையான ஆரோக்கிய பராமரிப்பு வழங்கும் பொருட்டு எப்படி வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் செல்லுபடித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துகின்றன.

European Union Evidence Based Medicine Unity Project
EU-EBM Unity Project திட்டமானது, ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், மற்றும் பிரஞ்சு-ல் ஐந்து அடிப்படை பயிற்சி படிகளைக் கொண்ட ஆதாரம்-சார்ந்த வழிமுறை பயிற்சியையும், பயிற்சியாளர் பயிற்றுவிப்பு பாடத்திட்டத்தையும் இணையப் பயிற்சியாக அளிக்கிறது.

Appraisal of Guidelines for Research and Evaluation (AGREE)
Appraisal of Guidelines for Research and Evaluation (AGREE) கருவி, நடைமுறை வழிகாட்டலின் ஆக்க முறையையும் மற்றும் தகவல் அறிக்கையிடுதலின் தரத்தையும் மதிப்பீடு செய்கிறது. அசல் AGREE கருவி தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இத்தளம், புதிய AGREE II கருவி குறித்த தகவல் மற்றும் தகவல் வளங்களைக் கொண்டிருக்கிறது.

World Physiotherapy
World Physiotherapy ஆதாரம்-சார்ந்த பிசியோதெரபியை தீவிரமாக ஊக்குவிக்கிறது.

பயனர் பயிற்சி வளங்கள்

Healthdirect
Healthdirect, நம்பகமான தரமான ஆரோக்கிய தகவல் மற்றும் ஆலோசனைகளை இணையம் மற்றும் தொலைபேசி மூலம் எளிதான அணுகலை வழங்குகிறது. நம்பகமான ஆஸ்திரேலிய நிறுவனங்களின் வலைத்தளங்களில் உள்ள தகவல் வளங்களுக்கான ஆயிரக்கணக்கான இணைப்புகளை இந்த வலைத் தளம் வழங்குகிறது. நீங்கள் எங்கிருந்தும், எந்நேரமும் தகவலறிந்த சிகிச்சை தேர்வுகள் செய்வதற்கு உதவ, இந்த சேவை நாள் ஒன்றுக்கு 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் கிடைக்கிறது.

Healthfinder
Healthfinder தரவுத் தளம், இணையத்தில் உள்ள அரசாங்க மற்றும் இலாப நோக்கமற்ற ஆரோக்கியம் மற்றும் மனித சேவைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

Informed Health Online
முந்தைய Cochrane Consumer Network-ன் இணையதளம். Informed Health Online என்பது நுகர்வோர்களுக்காக, காக்ரேன் திறனாய்வுகளின் சுருக்கவுரைகளைக் கொண்ட தரவுத்தளமாக உள்ளது.

PEDro-வின் நுகர்வோர் தேடல் (Consumer Search)
Physiotherapy Evidence Database PEDro-வின் நுகர்வோருக்கான இடைமுகம்.

ஆதாரம்-சார்ந்த பிசியோதெரபி நடைமுறையை ஆதரிப்பதற்கு, புதிய, உயர்தர இணைப்புகளுக்கான ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆலோசனைக் கூற, எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்