யார் நாங்கள்

PEDro கூட்டாண்மை, பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவால் 1999-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தற்போது, சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மஸ்குலோ-ஸ்கில்ட்டல் ஹெல்த்-ல் உள்ளது. PEDro கூட்டாண்மையின் பணி, கிடைக்கும் சிறந்த ஆதாரத்தை மருத்துவ பயன்பாட்டுக்கு வழிவகுப்பதன் மூலம் பிசியோதெரபி சேவைகளின் செயல்திறனை அதிகரிப்பதாகும். PEDro கூட்டாண்மை, “பயனுள்ள பிசியோதெரபியானது, மக்கள் சார்ந்தது, தடுப்பு நோக்குடையது, பாதுகாப்பானது, தொழில்நுட்ப திறமை வாய்ந்தது, மற்றும் சிறந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்து, திறமையாக நிர்வகிக்கப்படுவது” என்பதை நம்புகிறது.

PEDro கூட்டாண்மை, பிசியோதெரபி ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் பயனுள்ள பிசியோதெரபியை செயல்படுத்தவும், கீழ்காணும் அமைப்புகளின் ஆலோசானைப்படி ஒரு இலாப-நோக்கற்ற அமைப்பாக செயல்படுகிறது:

  • தொழில்முறை நிறுவனங்கள் (World Physiotherapy-ன் உறுப்பினர் அமைப்புக்கள் உட்பட)
  • பிசியோதெரபி சேவைகளை வாங்கியவர்கள் (மூன்றாம் தரப்பு நபர்கள் மற்றும் பணியாளரின் இழப்பீடு சீரமைக்கும் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் ஆரோக்கிய நிதிகள் உட்பட)
  • பிசியோதெரபி சேவை வழங்கியவர்கள் (பிசியோதெரபி துறைகள், பகுதி சுகாதார அதிகார அமைப்புகள் மற்றும் தனியார் பயிற்சியாளர்கள் உட்பட)
  • பிசியோதெரபி பதிவு மற்றும் உரிமம் அதிகாரிகள்
  • பிசியோதெரபி படிப்பு திட்டங்கள், மற்றும்
  • நுகர்வோர் நலன்களை பிரதிநித்துவம் செய்யும் குழுக்கள்.

கிடைக்க பெறும் சிறந்த ஆதாரத்தை, வழக்கமான பிசியோதெரபி மருத்துவ நடைமுறையில் பயன்படுத்துவதற்கு பல தடைகள் உள்ளன. இத்தகைய தடைகளை கடக்க உதவும் பல்வேறு சேவைகளை PEDro கூட்டாண்மை வழங்குகிறது:

  • ஆதாரத்தை அணுகுதல்: PEDro கூட்டாண்மையானது, PEDro, Physiotherapy Evidence Database மற்றும் Diagnostic Test Accuracy database (DiTA) தரவுத்தளங்களை பராமரிக்கிறது. PEDro என்பது சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் பிசியோதெரபியில் உள்ள ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு தரவுத்தளம் ஆகும். DiTA என்பது பிசியோதெரபி சார்ந்த நோய் கண்டறிதலின் நுட்பம் சம்பந்தமான முதன்மை ஆய்வுகள் மற்றும் திறனாய்வுகளின் தரவுத்தளமாகும். இவை இரண்டும், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் பிறருக்கும், சிகிச்சை பலாபலன் மற்றும் நோய் கண்டறிதல் பரிசோதனைகளின் நுட்பம் பற்றிய சிறந்த ஆதாரத்தை விரைவாக அணுகுவதற்கு அமைக்கப்பட்டுள்ளன.
  • விமர்சன மதிப்பீடு: PEDro-வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், PEDro அளவை கொண்டு தர மதிப்பீடு செய்யப்படுகின்றன. மருத்துவ ஆராய்ச்சி குறித்த விமர்சன மதிப்பீட்டு திறமைகளை பயனர்கள் பெறுவதற்காக, PEDro கூட்டாண்மை, ஆன்லைன் PEDro அளவை பயிற்சி திட்டத்துடன் விரிவுரைகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது.
  • நடைமுறைப்படுத்தல்: சிகிச்சை விளைவுகள் பற்றிய தெளிவான ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கூட, ஆதாரம்-சார்ந்த நடைமுறையை செயல்படுத்துதல், குறிப்பாக, அவை தற்போதைய நடைமுறை ஆதாரத்திற்கு எதிராக இருந்தால் கடினமாக இருக்க முடியும். PEDro கூட்டாண்மையானது, தனிநபர்கள் மற்றும் குழுக்களோடு இணைந்து பணி செய்வதன் மூலம் பயனுள்ள ஆரோக்கிய பராமரிப்பு செயல்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்கிறது. மருத்துவத் துறை சேவைகளில் நடத்தை மாற்றம் ஏற்படுத்த கூடியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ள செயல்படுத்தல் உத்திகளை தேர்ந்தெடுக்க, PEDro கூட்டாண்மை அவர்களுக்கு உதவ முடியும்.

வழிநடத்தும் குழு

PEDro கூட்டாண்மை, ஒரு வழிநடத்தும் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது:

பேராசிரியர் கேத்தரின் ஷெரிங்க்டன்

சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மஸ்குலோ-ஸ்கில்ட்டல் ஹெல்த்

PhD, MPH, BAppSc(Physiother), FACP, FAHMS

கேத்தரின், இன்ஸ்டிடியூட் ஆப் மஸ்குலோ-ஸ்கில்ட்டல் ஹெல்த்-ல், உடலியக்க நடவடிக்கை, முதுமை மற்றும் இயலாமை ஆகிவற்றை மைய பொருளாக கொண்ட ஆராய்ச்சியை நடத்துகிறார். இவரது ஆராய்ச்சி, கீழே விழுவதை தடுப்பதற்கும் மற்றும் முதிர் வயதினர் மற்றும் உடல் இயலாமை கொண்டவர்களில் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் உடலியக்க நடவடிக்கை சிகிச்சை தலையீடுகளை நோக்கமாக கொண்டுள்ளது. இவர், PEDro-வை நிறுவியவர்களில் ஒருவராவார்.

இணை பேராசிரியர் மார்க் ஹெல்கின்ஸ்

சிட்னி பல்கலைக்கழகம்

PhD, MHSc, BA, Bphty

மார்க், சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்டில், மருத்துவர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் பணியிட அடிப்படையிலான ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சி முறைகளை கற்பிக்கிறார். அவரது தனிப்பட்ட ஆராய்ச்சி ஆர்வங்கள் பின்வருமாறு: சுவாச நோயில் உடல் மற்றும் மருந்தியல் சிகிச்சைகள்; ஒட்டுமொத்த சிகிச்சை விளைவை அதிகரிக்க இந்த சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்தல்; மற்றும் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துதல், ஆகியவை ஆகும். மார்க், சிட்னி மருத்துவப் பள்ளியில் மருத்துவ இணை பேராசிரியராகவும், ஜர்னல் ஆஃப் பிசியோதெரபியின் அறிவியல் பதிப்பாசிரியராகவும் உள்ளார்.

Natalie Collins

School of Health and Rehabilitation Sciences, The University of Queensland

PhD, MSportsPhysio, BPhty(Hons)

ஆலோசனைக் குழு

PEDro கூட்டாண்மை க்கு ஆதாரம்-சார்ந்த நடைமுறை தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு உள்ளது. குழுவின் உறுப்பினர்கள்:

பேராசிரியர் லியோனார்டோ ஒலிவேரா பெனா கோஸ்டா

யுனிவர்சிடேட் சிடேட் டி சாவோ பாலோ, பிரேசில்

லியோ, யுனிவர்சிடேட் சிடேட் டி சாவோ பாலோவில், பிசியோதெரபி சிகிச்சையில் முதுநிலை மற்றும் முனைவர் கல்வி திட்டங்களின் தலைவராக உள்ளார். இவரது ஆராய்ச்சி, கீழ் முதுகுவலி உள்ளவர்களுக்கு மருந்தியல் அல்லாத சிகிச்சை தலையீடுகளின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்துகிறது.

பேராசிரியர் ரெபேக்கா L க்ரெய்க்

ஆர்காடியா பல்கலைக்கழகம், அமெரிக்கா

பெக், ஆர்காடியா பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் ஹெல்த் சயின்சசின் டீன் ஆவார். இதற்கு முன்பு, பிசியோதெரபி துறையின் தலைவராக பணியாற்றினார். அவர், வயது முதிர்ந்தோருடன் பணிபுரிந்தாலும் அல்லது மனித நோயின் விலங்கு மாதிரிகளை ஆராய்ந்தாலும் சரி, அவரது ஆராய்ச்சியின் கருப்பொருள் இணக்கத்திறன் ஆகும். இவர், Improving Community Ambulation After Hip Fracture trial என்ற ஆராய்ச்சியில், இணை-முதன்மை ஆராய்ச்சியாளராக உள்ளார்.

பேராசிரியர் சாலி க்ரீன்

மொனாஷ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா

சாலி, காக்ரேன் ஆஸ்திரேலியாவின் இணை-இயக்குநராக உள்ளார். மேலும், ஒரு காக்ரேன் திறனாய்வு விமர்சகராகவும் செயல்படுகிறார். அவரது ஆராய்ச்சி, ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து மருத்துவ நடைமுறை மற்றும் கொள்கையில் ஏற்பட வேண்டிய நீடித்த மாற்றத்திற்கு, பயனுள்ள மற்றும் திறமையான அறிவு பரிமாற்ற பாதையை ஆராய்வதன் மூலம் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பேராசிரியர் சாலி லாம்ப்

எக்ஸிடெர் பல்கலைக்கழகம், யுனைடெட் கிங்டம்

சாலி, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில், மிரில் கில்லிங்சின் ஹெல்த் இன்னோவேஷன் பேராசிரியர் ஆவார். இவர், முதுமை, இயலாமை மற்றும் மறுவாழ்வு சம்மந்தமான ஆராய்ச்சிகளில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அறிஞர். சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதார சேவை நடைமுறையின் உயர் தர மதிப்பீடு ஆகியவற்றில் அவர் ஒரு அனுபவமிக்க ஆராய்ச்சி முறையியலாளர் ஆவார்.

பேராசிரியர் பிலிப் வேன் டேர் வீஸ்

ராட்போட் பல்கலைக்கழக மருத்துவ மையம், நெதர்லாந்து

பிலிப், நெதர்லாந்தில் உள்ள ராட்போட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அறிவியல் சுகாதார நிறுவனத்தில் (ஐ.க்யூ ஹெல்த்கேர்) மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். இவரது ஆராய்ச்சி திட்டங்கள், சுகாதார சேவைகளின் தரம், செயல்படுத்தல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதும் செயல்படுத்துவதும் அவரது ஆராய்ச்சியின் முக்கிய துறைகளில் ஒன்றாகும்.

பேராசிரியர் கிறிஸ்டோபர் மெஹர்

சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மஸ்குலோ-ஸ்கில்ட்டல் ஹெல்த், ஆஸ்திரேலியா

கிறிஸ், சிட்னி பல்கலைக்கழகத்தின், ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்-ல் பேராசிரியராக உள்ளார். இவரது ஆராய்ச்சி, முதுகு வலியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இவர், PEDro-வை நிறுவியவர்களில் ஒருவராவார்.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்