1. PEDro என்றால் என்ன?
Physiotherapy Evidence Database (அல்லது, சுருக்கமாக “PEDro”) என்பது உலகமெங்கும் உள்ள பிசியோதெரபிஸ்டுகளுக்கு, உயர்தர மருத்துவ ஆராய்ச்சிக்கு எளிதான அணுகலை வழங்குவதன் மூலம், அவர்கள் சிறப்பாக சேவை செய்யவும் மற்றும் கற்பிக்கவும் வழி செய்கிறது. PEDro, 62,000-க்கும் மேலான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் பிசியோதெரபி தொடர்புடைய ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களை அணுக உதவும் ஒரு சிறப்பாக-நிறுவப்பட்ட, உண்மையான மற்றும் நம்பத்தகுந்த வலைத்தளமாக திகழ்கிறது.
2021 ஆம் ஆண்டில், 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் ஒவ்வொரு 7 விநாடிகளிலும் (மொத்தம் 4.2 மில்லியனுக்கும் அதிகமான) PEDro தேடலை நிகழ்த்தினர். உலகளாவிய பிசியோதெரபி சமூகத்திற்கு இலவசமாகக் PEDro கிடைக்கிறது மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.PEDro-வில் உள்ள அனைத்து கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளும் PEDro அளவுகோலைக் கொண்டு தர மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள் மூலம், பயனர்கள் தங்கள் நடைமுறைக்கு வழிகாட்ட பொருத்தமான மற்றும் சரியான சோதனைகளை விரைவாகவும் எளிதாகவும் அடையாளம் காண முடியும். பிசியோதெரபி ஆராய்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதால், நேரம் கிடைக்காமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இது கூடுதல் முக்கியமானதும் கூட.
2. PEDro எவ்வாறு தயாரிக்கப்பட்டது?
PEDro-வானது பிசியோதெரபிஸ்டுகளால் பிசியோதெரபிஸ்டுகளுக்காக தயாரிக்கப்பட்டது. இது, உலகளவில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு மிகவும் மதிக்கத்தகுந்த ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. PEDro, சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்-டில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் மஸ்குலோஸ்கெலிட்டலின் கூட்டாண்மையால் தொடக்கப்பட்டு மற்றும் பராமரிக்கப்படுகிறது. கையிருப்பிலுள்ள சிறப்பான ஆதாரத்தை மருத்துவ பயன்பாட்டிற்கு வழி வகுப்பதன் மூலம் பிசியோதெரபி சேவைகளின் செயல்திறனை அதிகரிப்பதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.
PEDro-வானது, தொழிலக பங்காளர்களிடமிருந்து நிதி உதவி, ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கும் அமைப்புகள், மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் இலாப நோக்கற்ற அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உயர்தர பிசியோதெரபி பராமரிப்புக்கு PEDro-வின் விலைமதிப்பற்ற பங்களிப்பிறகு நீங்கள் நன்கொடை அளித்தோ அல்லது கூட்டாண்மை குறித்து எங்களுடன் கலந்தோலசிக்க எங்களை அணுகியோ, உங்கள் ஆதரவை அளிக்கலாம்.
3. PEDro-விற்கு நீங்கள் உதவ என்ன செய்ய வேண்டும்?
சோதனைகள், திறனாய்வுகள், மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க, மற்றும் மதிப்பிட நாங்கள் எப்பொழுதும் தன்னார்வலர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதாவது ஒரு வகையில் உதவ விரும்பினால், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும். உலகின் எங்கிருந்தும், நீங்கள் ஒரு தன்னார்வலராக ஆக இருக்க முடியும்.
ஒரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டல் பற்றி தெரிந்து அது PEDro-வில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், ஆனால் அது இல்லையென்றால், விவரங்களுடன் தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.