PEDro, Physiotherapy Evidence Database-விற்கு உங்களை வரவேற்கிறோம்

PEDro, 24 ஆண்டுகளுக்கும் மேலாக பிசியோதெரபி பயிற்சியை வழிகாட்டி வருகிறது. இது, பிசியோதெரபி சிகிச்சை தலையீடுகளை மதிப்பிடும் 62,000 சோதனைகள், திறனாய்வுகள் மற்றும் வழிகாட்டுதல்களின் இலவச தரவுத்தளமாகும். உங்களின் ஆராய்ச்சி கேள்விகளுக்கு பதில் கிடைக்க, நீங்கள் தேடலாம் (தேடுங்கள்); உங்களுக்கு ஆராய்ச்சி ஆர்வமுள்ள பிஸியோதெரபி பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய ஆராய்ச்சியை பற்றி அறிய உலாவலாம் (உலாவுங்கள்); ஆதாரம்-அடிப்படையாகக் கொண்ட நடைமுறையைப் பற்றி மேலும் கற்றுக் கொள்ளலாம் (கற்றுக் கொள்ளுங்கள்); பயனுள்ள தகவல் வளங்களை அணுகலாம், அல்லது இந்த விலைமதிப்பற்ற உலகளாவிய வளத்தைப் பற்றி மேலும் அறியலாம் (எங்களைப் பற்றி).

Nav-Wheel

PEDro-வை பற்றி

PEDro, ஆதாரம்-சார்ந்த பிசியோதெரபி நடைமுறைக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பிசியோதெரபி சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிடும் சிறந்த ஆராய்ச்சிகளை விரைவாக அணுக உதவுகிறது. சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள், முறையான திறனாய்வுகள் மற்றும் ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்கள் என மிகவும் கடுமையான ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தும் ஆய்வுகள் மட்டுமே குறியிடப்படுகின்றன. PEDro-வின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், சோதனைகளின் தரம் PEDro அளவுகோலை கொண்டு சுயாதீனமாக மதிப்பிடப்படுகின்றன. இந்த தர மதிப்பீடுகள், பயனர்களை சிறந்த சோதனைகளுக்கு வழிகாட்டவும், மற்றும் நடைமுறையை வழிநடத்த போதுமான தகவல்களுக்கும் உதவுகின்றன.

PEDro மூன்று தேடல் பக்கங்களைக் கொண்டுள்ளது (மேம்பட்ட (Advanced), எளிய (Simple) மற்றும் நுகர்வோர் (Consumer)). மருத்துவ தொழில் முறையாளர்கள், தேடல் சொற்களை துல்லியமாக வரையறுக்க, 13 உரை பெட்டிகளைக் கொண்ட மேம்பட்ட தேடல் (Advanced Search)-ஐ பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். இந்த காரணத்திற்காக, தலைப்பு, அடிக்குறிப்பு மற்றும் PEDro ஐகானில் உள்ள தேடல் பொத்தான்கள் உங்களை நேரடியாக மேம்பட்ட தேடல் (Advanced Search) பக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றன. புதிதாக தேட தொடங்குபவர்கள், ஒற்றை உரை பெட்டியைக் கொண்ட எளிய தேடல் (Simple Search) மூலம் தொடங்க விரும்பலாம். நோயாளிகள் மற்றும் பிசியோதெரபியின் பிற பயனர்கள், குறைவான தொழில்நுட்ப மொழியமைப்பு கொண்ட நுகர்வோர் தேடல் (Consumer Search) பக்கத்தை அணுகலாம்.

PEDro, University of Sydney-யில் உள்ள Institute for Musculoskeletal Health மற்றும் Sydney Local Health District ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, Neuroscience Research Australia (NeuRA) மூலம் வழங்கப்படுகிறது.

PEDro ஆதரவாளர்கள்

PEDro என்பது, தொழில்துறை கூட்டாண்மையாளர்கள், நிதி உதவி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் லாப நோக்கற்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. PEDro வளர, நன்கொடை அளிக்கவோ அல்லது கூட்டாண்மை பற்றி விவாதிக்கவோ எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

“ஆஸ்திரேலிய பிசியோதெரபி அசோசியேஷன்” மற்றும் “சார்ட்டர்ட் சொசைட்டி ஆஃப் பிசியோதெரபி” ஆகியோர் வழங்கிய தாராள ஆதரவை நாங்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் ஆதரவாளர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் PEDro ஆதரவாளர்கள் பக்கத்தில் கிடைக்கின்றன.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்