தேடல் உதவி

PEDro மூன்று தேடல் பக்கங்களைக் கொண்டுள்ளது (மேம்பட்ட (Advanced), எளிய (Simple) மற்றும் நுகர்வோர் (Consumer)). மருத்துவ தொழில் முறையாளர்கள், தேடல் சொற்களை துல்லியமாக வரையறுக்க, 13 உரை பெட்டிகளைக் கொண்ட மேம்பட்ட தேடல் (Advanced Search)-ஐ பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். இந்த காரணத்திற்காக, தலைப்பு, அடிக்குறிப்பு மற்றும் PEDro ஐகானில் உள்ள தேடல் பொத்தான்கள் உங்களை நேரடியாக மேம்பட்ட தேடல் (Advanced Search) பக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றன. புதிதாக தேட தொடங்குபவர்கள், ஒற்றை உரை பெட்டியைக் கொண்ட எளிய தேடல் (Simple Search) மூலம் தொடங்க விரும்பலாம். நோயாளிகள் மற்றும் பிசியோதெரபியின் பிற பயனர்கள், குறைவான தொழில்நுட்ப மொழியமைப்பு கொண்ட நுகர்வோர் தேடல் (Consumer Search) பக்கத்தை அணுகலாம்.

  1. நீங்கள் தேட ஆரம்பிப்பதற்கு முன்
  2. மேலோட்டம்
  3. கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்துதல்
  4. தேடுதல் சொற்றொகுதிகளை இணைத்தல்
  5. சுருக்கவுரை காணவில்லையா?
  6. முழு உரையை அணுகுதல்
  7. ஆவணங்களை தேர்வு செய்தல்

1. நீங்கள் தேட ஆரம்பிப்பதற்கு முன்

நீங்கள் மருத்துவ ஆராய்ச்சியை தேடத் தொடங்கும் முன், நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வியை பற்றி நினைக்க சில நேரம் செலவு செய்வது சிறந்ததாகும். உங்கள் கேள்வியை உருவாக்கி மற்றும் தெளிவு செய்வதன் மூலம், அதற்கு பதிலளிக்க ஆராய்ச்சியை கண்டுபிடிப்பது எளிதாகுகிறது. இந்த தனிமுறை காணொளி பயிற்சி, மருத்துவ கேள்விகளை PICO (Patient-Intervention-Comparison-Outcome) வடிவமைப்பில் எவ்வாறு கேட்பது என்பதை விவரிக்கிறது.

2. மேலோட்டம்

PEDro தரவுத்தளம், இடது திசை பட்டையில் உள்ள இணைப்புகளை அழுத்துவதன் மூலம் அணுகக் கூடிய எளிய அல்லது மேம்பட்ட தேடல் பக்கத்திலிருந்து தேடப்படலாம். தனிப்பட்ட சோதனைகள், திறனாய்வுகள் அல்லது வழிக்காட்டல்கள் “ஆவணங்கள்” என குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆவணங்களை கண்டுப்பிடிக்க, தேடல் பக்கத்தில் (நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சோதனைகள், திறனாய்வுகள் அல்லது வழிக்காட்டல்களின் பண்புகள்) தேடல் திட்ட அளவைகளை குறிப்பிடவும். அதன் பின், தரவுத்தளத்தில் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் PEDro தேடுகிறது மற்றும் தேடல் முடிவுகளை கொடுக்கிறது: தேடல் திட்ட அளவைகளோடு பொருந்தும் ஆவணங்களின் தொகுப்பு, தேடல் முடிவுகள், தலைப்புகள் கொண்ட ஒரு பட்டியலாக காட்டப்படும்.

தேடல் முடிவுகள், தலைப்புகள் கொண்ட ஒரு பட்டியலாக காட்டப்படும். முதலில் காட்டப்படும் மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களைத் தொடர்ந்து திறனாய்வுகள் பின்னர் சோதனைகள் காண்பிக்கப்படும். வழிகாட்டல்கள் ஆண்டு வாரியாக வகுக்கப்படும் (மிக சமீபத்தியவை முதலாவதாக). காக்குரேன் திறனாய்வுகள் முதலாவதாக தோன்றி காக்குரேன்-அல்லாத திறனாய்வுகள் தொடர்ந்து தோன்றும்படியும், மற்றும் ஆண்டு வாரியாகவும் (மிக சமீபத்தியவை முதலாவதாக) திறனாய்வுகள் வகுக்கப்பட்டுள்ளன. சோதனைகள், PEDro மதிப்பெண் வாரியாக (அதிக மதிப்பெண்கள் முதலாவதாக) பின்னர் ஆண்டு (மிக சமீபத்தியவை முதலாவதாக) வாரியாக வகுக்கப்பட்டுள்ளன. ஒரு ஆவணத்தின் தலைப்பை அழுத்துவதன் மூலம் அதனுடைய கூடுதலான தகவலை பார்க்க முடியும். ஆசிரியர், தலைப்பு, ஆய்வு முறை, முறையின் மதிப்பெண் மற்றும் (வெளியீட்டாளர் அனுமதி வழங்கியுள்ளாரா என்பதின் பட்சத்தில்) சுருக்கவுரை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விவரமான தேடல் முடிவை இது கொடுக்கிறது.

நீங்கள் உங்கள் இணைய உலாவியில் பின்னாக பொத்தானை பயன்படுத்தி, விவரமான தேடல் முடிவுகள் பக்கத்திலிருந்து தேடல் முடிவுகள் பக்கத்திற்கு திரும்ப முடியும். சேமிக்க, அச்சிட அல்லது மின்னஞ்சல் அனுப்புவதற்கு எளிதாக, நீங்கள் ஆவணங்களையும் தேர்ந்தெடுக்க முடியும்.

எளிய தேடலை பயன்படுத்தி ஒரு ஆவணத்தை அல்லது ஆவணங்கள் குழுவை கண்டுபிடிக்க:

  • எளிய தேடல் பக்கத்திற்கு செல்லவும்.
  • தேடல் பெட்டியில் உங்கள் தேடல் சொற்தொகுதி அல்லது சொற்தொகுதிகளை தட்டச்சு செய்யவும்.
  • PEDro தரவுத்தள தேடலுக்கு, “தேடலை தொடங்குக” பொத்தானை அழுத்தவும்.

இந்த தனிமுறை காணொளி பயிற்சி, PEDro-வை பயன்படுத்தி ஒரு எளிய தேடலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது.

மேம்பட்ட தேடலை பயன்படுத்தி ஒரு ஆவணத்தை அல்லது ஆவணங்கள் குழுவை கண்டுபிடிக்க:

  • மேம்பட்ட தேடல் பக்கத்திற்கு செல்லவும்.
  • நீங்கள், உரை பெட்டிகளில் உரையை தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது தேடல் துறைகள் ஒன்றின் கீழ்-இழுப்பு வகைப்பட்டியலில் இருந்து தேர்ந்தெடுப்பதன் மூலமோ நீங்கள் தேடுவதை குறிப்பிடவும். பொதுவாக, சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேடல் சொற்தொகுதிகளை தட்டச்சு செய்து தேடுவது மிகவும் திறன் வாய்ந்ததாகும்.
  • நீங்கள் ஒவ்வொரு பெட்டியிலும் தேடல் சொற்தொகுதிகளை புகுத்த தேவையில்லை என்பதை அறிக. பெரும்பாலான தேடல்களுக்கு, அதிகபட்சமாக மூன்று பெட்டிகள் போதுமானது (பெரும்பாலும், சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையில் ஒன்று அல்லது இரண்டு நன்கு தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள் போதுமானது).
  • நீங்கள் கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்தி (வீக்கம் மற்றும் வீக்கம், அல்லது கால் மற்றும் கால்கள் போன்ற) சொற்களின் மாறுப்பட்ட வகைகளை தேடலாம்.
  • மேம்பட்ட தேடல் பக்கத்தின் கீழே, தேடல் முடிவுகள் பக்கத்தில் உங்களுக்கு காட்டப்பட வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையை நீங்கள் (5 முதல் 50 வரை) தேர்ந்தெடுக்கவும். இந்த நடவடிக்கை சொந்த விருப்பமாகும். நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றால், தேடல், ஒவ்வொரு தேடல் முடிவுகள் பக்கத்திலும் 20 ஆவணங்களை திருப்பும்.
  • நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறையில், தேடல் சொற்தொகுதிகளை புகுத்தியோ மற்றும் தேடல் சொற்தொகுதிகளை AND மற்றும் OR இயக்குச் சொற்கள் மூலம் இணைப்பதன் மூலம் அதிக சக்தி வாய்ந்த தேடல்களை செய்ய முடியும்.
  • PEDro தரவுத்தள தேடலுக்கு “தேடலை தொடங்குக” பொத்தானை அழுத்தவும்.

இந்த தனிமுறை காணொளி பயிற்சி, PEDro-வை பயன்படுத்தி ஒரு மேம்பட்ட தேடலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது.

3. கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்துதல்

இயல்பு நிலையில், PEDro ஒரு துல்லியமான இணைச் சொல்லை தேடும். உதாரணமாக Bo, Bo K, அல்லது Williams BO கொண்ட அனைத்து ஆவணங்களையும் கண்டறியும், ஆனால் Boers M. கொண்ட ஆவணங்களை அல்ல.

பெரும்பாலும், ஒரு வார்த்தையின் பல்வேறு எண்ணிக்கையான வேறுபாடுகளை தேடுவது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் “enthesopathy” என்ற வார்த்தையோ அல்லது “enthesopathies” என்ற வார்த்தையோ கொண்டிருக்கும் ஆய்வு அறிக்கைகளில் நீங்கள் ஆர்வம் உடையவராய் இருக்கலாம். ஒரு எழுத்தையோ அல்லது எழுத்துக்கள் குழுவையோ குறிப்பிட, ஒரு வார்த்தையின் முடிவில் (*) குறியை பயன்படுத்தி நீங்கள் வேறுபட்ட வார்த்தைகளைக் காணலாம். ஆதலால், enthesopath* என்று தட்டச்சு செய்து “enthesopathy” அல்லது “enthesopathies” கொண்டிருக்கும் ஆவணங்களை திரும்ப பெறலாம்.

ஒரு எழுத்தையோ அல்லது எழுத்துக்கள் குழுவையோ குறிப்பிட, ஒரு வார்த்தையின் ஆரம்பத்திலும் (*) குறியை பயன்படுத்தி நீங்கள் வேறுபட்ட வார்த்தைகளைக் காணலாம். உதாரணமாக, நீங்கள், edema, oedema, lymphedema அல்லது lymphoedema– யை கொண்டிருக்கும் ஆய்வு அறிக்கைகளில் நீங்கள் ஆர்வம் உடையவராய் இருக்கலாம். ஆதலால், நீங்கள் *edema என்று செய்தி பகுதியில் தட்டச்சு செய்யலாம். இந்த அஸ்ட்டிரிஸ்க் குறியீடு வரையற்ற முனைச் சிதைவைக் குறிப்பிடுவதாகும் -அது எத்தனை எண்ணிக்கையிலான எழுத்துகளையும் குறிப்பிடும் (0 உட்பட).

கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களின் மற்றொரு வடிவம், கட்டாய முனைச் சிதைவைக் குறிக்கும் @ சின்னம் (ஒற்றை பாத்திரம்) ஆகும். ஒரு வார்த்தையில் ஒற்றை எழுத்து வேறுபாடுகள் உள்ள போது நீங்கள் @ சின்னத்தை பயன்படுத்த முடியும். உதாரணமாக, நீங்கள் ஆசிரியர் மூலம் தேடும் போது, மற்றும் ஆசிரியரின். பெயர் Rawson அல்லது Rawsen என்று தெரியாது என்றால், நீங்கள் Raws@n என்று தேட முடியும்.

4. தேடுதல் சொற்றொகுதிகளை இணைத்தல்

மேம்பட்ட தேடல் பக்கத்தின் துறைகளில், அனைத்து தேடல் சொற்தொகுதிகளை பயன்படுத்தி தேட, AND இயக்குச் சொல்லை பயன்படுத்தவும் (மேம்பட்ட தேடல் பக்கத்தின் கீழே, “சரி இணையான சொற்தொகுதிக்கு பொருத்துக”-விற்கு அடுத்த (AND) பொத்தானை அழுத்துவதன் மூலம்). இது, நீங்கள் குறிப்பிட்ட முழுமையான தேடல் சொற்தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கும் சோதனைகள், திறனாய்வுகள், அல்லது வழிகாட்டல்களை PEDro தேடுவதை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட தேடல் சொற்தொகுதிகளில் ஒன்றை பயன்படுத்தும் போது திருப்பப்படும் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, பெறப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது இதன் விளைவாகும். ஒரே ஒரு தேடல் சொற்தொகுதியை பயன்படுத்தும் தேடலில் மிக அதிக ஆவணங்கள் திருப்பப்படும் போது, தேடல் சொற்தொகுதிகளை இணைக்க இந்த பொத்தானை அழுத்தவும்.

மேம்பட்ட தேடல் பக்கத்தின் துறைகளில் ஏதாவது தேடல் சொற்தொகுதிகளை பயன்படுத்தி தேட, OR இயக்குச் சொல்லை பயன்படுத்தவும் (மேம்பட்ட தேடல் பக்கத்தின் கீழே, சரி இணையான சொற்தொகுதிக்கு பொருத்துக-விற்கு அடுத்த (OR) பொத்தானை அழுத்துவதன் மூலம்). இது, நீங்கள் குறிப்பிட்ட தேடல் சொற்தொகுதிகளில் ஏதேனும் கொண்டிருக்கும் சோதனைகள், திறனாய்வுகள், அல்லது வழிகாட்டல்களை PEDro தேடுவதை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட தேடல் சொற்தொகுதிகளில் ஒன்றை பயன்படுத்தும் போது திருப்பப்படும் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, பெறப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் விளைவாகும். ஒரே ஒரு தேடல் சொற்தொகுதியை பயன்படுத்தும் தேடலில் மிகக் குறைவான ஆவணங்களை திருப்பும் போது, தேடல் சொற்தொகுதிகளை இணைக்க இந்த பொத்தானை அழுத்தவும்.

ஒரு தனி தேடலில், AND மற்றும் OR-ஐ உங்களால் கலக்க முடியாது. எனினும், நீங்கள் இரண்டு சொற்களை (அல்லது அதிகமான) (மற்றும் இடைப்பட்ட இடைவெளிகள் அல்லது இலக்கண குறிகள்), ஒரே சொல்லாக இருப்பது போன்று தெரிவதற்காக, தலைகீழான காற்புள்ளிகளில் உள்ளடக்குவதன் மூலம் (எ.கா., “lateral epicondylitis“) PEDro தேடலை ஏற்படுத்த முடியும். இது, இரண்டு சொற்தொகுதிகளை, ஒரு AND இயக்குச் சொல்லோடு திறம்பட ஒருங்கிணைக்கிறது. மாற்றாக, நீங்கள் கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களைப் இயக்குச் சொற்களாகப் (*) பயன்படுத்தி, தொடர்புடைய சொற்களை காண முடியும் (எ.கா. *edema”). இது, ஒரு OR இயக்கச் சொல்லைக் கொண்டு (இந்த உதாரணத்தில், edema, oedema, lymphedema மற்றும் lymphoedema), தொடர்புடைய சொற்களை திறம்பட ஒருங்கிணைக்கிறது. விருப்பப் பட்டால், இணைக்கப்பட்ட சொற்தொகுதிகளை மேம்பட்ட தேடல் பக்கத்தின் கீழேயுள்ள, AND அல்லது OR-ஐ பயன்படுத்தி பிற தேடல் துறைகளுடன் இணைக்கலாம்.

தலைகீழான காற்புள்ளிகளின் இடையே கணினி அடிப்படையிலான அடையாளச் சின்னங்களை வைப்பது சாத்தியம் இல்லை. உதாரணமாக “Medicine * Rehabilitation” எந்த ஆவணங்களையும் திருப்பாது.

தேடல் சொற்தொகுதிகளை இணைப்பதற்கான முறைகள் பின்வரும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது.

தேடப்பட வேண்டியது தேர்வு செய்க மற்றும் வகை கருத்துரைகள்
lateral மற்றும் epicondylitis என்ற வார்த்தைகளைக் சுருக்கவுரையில் கொண்டிருக்கும் அனைத்து ஆவணங்களும் (ஆனால், வெறும் lateral அல்லது வெறும் epicondylitis-ஐ சுருக்கவுரையில் கொண்டிருக்கும் ஆவணங்கள் அல்ல) சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையில் உள்ள lateral epicondylitis இது, treatment of lateral epicondylitis மற்றும் treatment of epicondylitis and pain on the lateral aspect of the arm என்று கொண்டிருக்கும் சுருக்கவுரைகளின் ஆவணங்களை மீட்டெடுக்கும்
lateral epicondylitis என்ற வார்த்தைகளை சேர்ந்து கொண்டிருக்கும் சுருக்கவுரைகளின் அனைத்து ஆவணங்களையும் மீட்டெடுக்கும் சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையில் உள்ள “lateral epicondylitis” இது, treatment of lateral epicondylitis என்று கொண்டிருக்கும் சுருக்கவுரைகளின் ஆவணங்களை மீட்டெடுக்கும், ஆனால், treatment of epicondylitis and pain on the lateral aspect of the arm என்று கொண்டிருக்கும் சுருக்கவுரைகளின் ஆவணங்களை மீட்டெடுக்காது
pain-ஐ சுருக்கவுரையிலும் மற்றும் electrotherapy-ஐ சிகிச்சை முறையாக கொண்டிருக்கும் அனைத்து ஆவணங்கள் (ஆனால் வெறும் pain, மற்றும் வெறும் electrotherapy) என்று வரிசைபடுத்தப்பட்டிருக்கும் ஆவணங்கள் அல்ல) சரி இணையான சொற்தொகுதிகளுக்கு பொருத்துக (AND) pain-ஐ சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையிலும், மற்றும் electrotherapies, heat, cold-ஐ சிகிச்சை துறையிலும்
pain-ஐ சுருக்கவுரையிலும், அல்லது electrotherapy-ஐ சிகிச்சையாகவும் கொண்டிருக்கும் அனைத்து ஆவணங்களும் சரி இணையான சொற்தொகுதிகளுக்கு பொருத்துக (OR) pain-ஐ சுருக்கவுரை மற்றும் தலைப்பு துறையிலும், மற்றும் electrotherapies, heat, cold-ஐ சிகிச்சை துறையிலும்

5. சுருக்கவுரை காணவில்லையா?

PEDro-வில் ஆவணங்களின் சுருக்கவுரைகள் தோன்றுவதற்கு முன் பத்திரிகை வெளியீட்டாளர்களின் அனுமதி பெறப்படும். இந்த அனுமதி வழங்கப்படாத (மிகவும் பொதுவான ஒன்றாகும்) பட்சத்தில் சுருக்கவுரைகள் காட்டப்படாது. விவரமான தேடல் முடிவுகள் பக்கத்தில், சுருக்கவுரை பிரிவில் அளிக்கப்பட்டுள்ள இணைப்பு (கள்) பின்பற்றி, பயனர்கள் சுருக்கவுரையை (மற்றும் சில நேரங்களில் ஆய்வு அறிக்கையின் முழு-உரை) அணுக முடியும். இணைப்புகளின் எண்ணிக்கை, Medline மற்றும் PubMed தரவுத்தளங்களில் ஆவணம் வரிசைப்படுத்தப்பட்டிருகிறதா, அதற்கு ஒரு DOI (டிஜிட்டல் பொருள் அடையாளங்காட்டி) உள்ளதா, அல்லது வெளியீட்டாளர் ஒரு இணையத் தளம் வைத்துள்ளாரா என்பவற்றை பொருத்து அமையும். இணைப்புகள், இலவச முழு-உரையை அணுகுவதற்கான வாய்ப்பு வரிசையில், அதிகமான வாய்ப்பு கொண்டதிலிருந்து குறைவானது வரை பட்டியலிடப்பட்டுள்ளது. வெளியீட்டாளர் இணையத் தளம் வழியாக சுருக்கவுரையை அணுகுவதற்கு கூடுதல் தேடுதல் தேவைப்படும்.

நீங்கள் சுருக்கவுரை தலைப்பு துறையில் ஒரு தேடல் சொற்தொகுதியை தட்டச்சு செய்தால், சுருக்கவுரை விவரமான தேடல் முடிவுகள் பக்கம் காட்டப்படாத போதும், அந்த தேடல் திட்ட அளவைகளை பூர்த்தி செய்கின்றனவா என்று தெரிய அனைத்து சுருக்கவுரைகளையும் PEDro தேடும்.

சில ஆவணங்கள் தங்களுடைய சுருக்கவுரைகளை கொண்டிருக்காது, ஏனென்றால் அவை வெளியிடப்பட்ட ஆய்வு பத்திரிகையின் பாணி அவ்வாறு ஆகும். நீங்கள் சுருக்கவுரை துறையில் சொற்தொகுதிகளுக்கு தேடினால், நீங்கள் சுருக்கவுரைகள் அல்லாத ஆவணங்களை தேட மாட்டீர்கள்.

6. முழு உரையை அணுகுதல்

முழு-உரைக்கான இணைப்புகள் (இலவசமாக அல்லது ஒரு பார்வைக்கு பணம் செலுத்துதல்) விவரமான தேடல் முடிவுகள் பக்கத்தில் உள்ள சுருக்கவுரை பிரிவில் உள்ளன. ஒரு ஆவணத்திற்கான இணைப்பு ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கலாம், அவை Medline மற்றும் PubMed தரவுத்தளங்களில் ஆவணம் வரிசைப்படுத்தப்பட்டிருகிறதா, அதற்கு ஒரு DOI (டிஜிட்டல் பொருள் அடையாளங்காட்டி) உள்ளதா, அல்லது வெளியீட்டாளர் ஒரு இணையத் தளம் வைத்துள்ளாரா என்பவற்றை பொருத்து அமையும். இணைப்புகள், இலவச முழு-உரையை அணுகுவதற்கான வாய்ப்பு வரிசை பிரகாரம் பட்டியலிடப்பட்டுள்ளன, பட்டியலின் ஆரம்பத்தில் உள்ள இணைப்புகள் இலவச முழு-உரைக்கு இணைப்பு கொள்ளும் அதிக வாய்ப்பு கொண்டவை, அதே சமயம், பட்டியலின் முடிவில் உள்ளவைகளுக்கு குறைவான வாய்ப்பாகும். PubMed Central, DOI மற்றும் PubMed இணைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவது சுருக்கவுரைக்கும் மற்றும் ஆவணத்தின் முழு-உரைக்கும் நேரடித் தொடர்பு கொடுக்க வேண்டும். வெளியீட்டாளர் இணையத் தளம் வழியாக சுருக்கவுரையை அணுகுவதற்கு கூடுதல் தேடுதல் தேவைப்படும்.

PEDro-வை பயன்படுத்தி ஒரு முழு ஆய்வு உரையை எவ்வாறு அணுகுவது என்பதை இந்த தனி முறை காணொளி பயிற்சி காட்டுகிறது.

7. ஆவணங்களை தேர்வு செய்தல்

தேடல் முடிவுகள் அல்லது விவரமான தேடல் முடிவுகள் பக்கங்களில் இருந்து ஆவணங்களை தேர்வு செய்யலாம். பின்னர், இந்த ஆவணங்களை, தேடல் முடிவுகள் அல்லது விவரமான தேடல் முடிவுகள் பக்கத்திலோ உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களைக் காட்டுக பொத்தானை அழுத்துவதன் மூலம் பார்க்க முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களைக் காட்டுக செயல்பாடு, பல ஆவணங்களுடைய ஆதார நூற் விவரங்கள் மற்றும் சுருக்கவுரைகளை சேமிப்பதையும் அல்லது அச்சிடுவதையும் எளிதாக்குகிறது. உங்களது இணைய உலாவியை பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை சேமிக்கலாம் அல்லது அச்சடித்து கொள்ளலாம். மாற்றாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தேடல் முடிவுகள் பக்கத்தில் உள்ள மின்னஞ்சல் முடிவுகள் பொத்தானை பயன்படுத்தி மின்னஞ்சலில் அனுப்பிக் கொள்ள முடியும்.

தேடல் முடிவுகள் பக்கத்தில் உள்ள தேடலை தொடரவும் பொத்தான் தேடல் பக்கத்திற்கு நீங்கள் திரும்ப உதவும். நீங்கள் தேடலை தொடரும்போது, எந்த ஆவணங்கள் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனவோ, அவை தேர்ந்தெடுக்கப்பட்டபடியே இருக்கும். விவரமான தேடல் முடிவுகள் பக்கத்தில் இருந்து ஒரு புதிய தேடலை தொடங்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்கள் மற்றும் உங்களின் தேடல் சொற்தொகுதிகள் அனைத்தையும் அழித்து விடும்.

தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தேடல் முடிவுகள் பக்கம் உள்ள இந்த ஆவணத்தை அகற்றவும் பொத்தானை (தேர்ந்தெடுக்கப்படாதவை) அழுத்துவதன் மூலம் அகற்ற முடியும். நீங்கள் தவறுதலாக ஒரு ஆவணத்தை இருமுறை தேர்ந்தெடுத்திருந்தால், இரட்டை தேர்ந்தெடுப்பு செய்தியோடு, இரட்டையான தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேடல் முடிவுகள் பக்கம் உள்ள பட்டியலில் முதலில் தோன்றும். இந்த ஆவண செய்தியை அகற்றுக என்பதை அழுத்துவதன் மூலம் ஆவணத்தை நீக்கலாம். ஆவணத்தின் மற்ற பிரதி தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் இருக்கும்.

எவ்வாறு ஆவணங்களை தேர்ந்தெடுக்கலாம், ஆவணங்களை சேமிக்கலாம், மற்றும் சேமிக்கப்பட்ட ஆவணங்களை குறுப்பீடு மென்பொருளில் இறக்குமதி செய்யலாம் என்பதை இந்த தனிமுறை காணொளி பயிற்சி விளக்கி காட்டுகிறது.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்