திட்ட அளவைகள் மற்றும் குறியீடுகளை அட்டவணை-யிடுதல்

இந்த பக்கம் PEDro-வின் அட்டவணையிடப்பட்ட திட்ட அளவைகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டுள்ளது:

 1. திட்ட அளவைகள்
 2. குறியீடுகள்

1. திட்ட அளவைகள்

மருத்துவ சோதனைகளுக்கான சேர்க்கை திட்ட அளவைகள்

மருத்துவ சோதனைகளில், PEDro-வில் சேர்ப்பதற்கான தகுதியுடையவைகள் மற்றும் அவ்வாறு இல்லாதவைகளை வேறுபடுத்தி அறிய கீழ்க்கண்ட திட்ட அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன:

 1. ஒரு சோதனை குறைந்தது இரண்டு தலையீடுகளின் ஒப்பீட்டை உள்ளடக்கியதாக வேண்டும். இந்த தலையீடுகளில் ஒன்று, சிகிச்சையின்மை கட்டுப்பாடு, அல்லது ஒரு போலி சிகிச்சையைக் கொண்டதாக இருக்க முடியும். மாற்றாக, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையீடுகளில், எது சிறந்தது என்று நிர்ணயிக்கும் நோக்கத்துடன் ஒப்பீடு செய்யப்படுவதாக இருக்கலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தலையீடுகளுக்கு உள்ளாகின்ற குறுக்கு பாய்வு சோதனைகள், பிற திட்ட அளவைகள் சந்திக்கப்படும் பட்சத்தில் PEDro-வில் சேர்க்கப்படும். நபர்கள், குழுக்களாக தலையீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் திரள் சோதனைகள், பிற திட்ட அளவைகள் சந்திக்கப்படும் பட்சத்தில் PEDro-வில் சேர்க்கப்படும். தலையீடுகளில் (ஆனால், வரம்பு இல்லாமல்), சிகிச்சைகள், தடுப்பு உத்திகள், நோய் கண்டறியும் பரிசோதனைகள் அல்லது உத்திகள் அல்லது மேலாண்மை அல்லது கல்வி உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கக் கூடும்.
 2. மதிப்பிடப்படும் தலையீடுகளில் குறைந்தது ஒன்றாவது, தற்போது ஒரு பிசியோதெரபி நடைமுறை பயிற்சியாகவோ அல்லது பிசியோதெரபி நடைமுறை பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க முடிய கூடியதாக இருக்க வேண்டும். இருப்பினும், பிசியோதெரபிஸ்ட்களால் ஆய்வு மேற்கொள்ள பட வேண்டியதில்லை. அதேபோல், சோதனையில், தலையீடுகள் ஒரு பிசியோதெரபிஸ்ட்டால் மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை.
 3. பிசியோதெரபி நடைமுறை பயிற்சியில் நிச்சயமாக பயன்படுத்த வேண்டிய பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய நபர்களுக்கு (அல்லது பிரதிநிதியாக இருக்க நோக்கம் கொண்டவர்களாய்) தலையீடுகள் அளிக்கப்படவேண்டும். ஒரு ஆரோக்கிய நிலைமை அல்லது ஊனம் கொண்ட மக்களுக்கு தலையீடு (ஒரு சிகிச்சை விஷயத்தில்) அல்லது ஒரு ஆரோக்கிய நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட அல்லது ஊனம் கொண்ட மக்களுக்கு தலையீடு (ஒரு தடுப்பு உத்தி விஷயத்தில்) அளிக்கப்படவேண்டும் என்று பொதுவாக பொருள்படும். மனிதர்களை தவிர விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் விசாரணைகளை PEDro-வில் காப்பகப்படுத்தப்பட மாட்டாது.
 4. தலையீடுகளுக்கு, சீரற்ற ஒதுக்கீடு அல்லது சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீடு மூலம் மக்களை ஒதுக்கீடு செய்வதை உள்ளடக்கியதாக சோதனை இருக்க வேண்டும். சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீடு மூலம், நாங்கள், மாறி மாறி ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டு முறைகளை, (எ.கா, “மருந்தகத்திற்கு வந்து ஒவ்வொரு இரண்டாவது நோயாளியும் சிகிச்சை குழுவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்”) போன்றவற்றையும், அல்லது ஒற்றை மற்றும் இரட்டை படை பிறந்த தேதிகள், அல்லது மருத்துவமனை பதிவு எண்கள் மூலம் மாறி மாறி ஒதுக்கீடு செய்யப்படும் ஒதுக்கீடு முறைகளை குறிக்கிறது. PEDro-வில் சேர்க்கப்படுவதற்கு, நிச்சயமாக, சீரற்ற ஒதுக்கீடு அல்லது சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீட்டை ஒரு ஆய்வு பயன்படுத்தி இருக்க வேண்டும் (அதாவது, இந்த ஒதுக்கீட்டு முறைகளில் ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்பட்டிருகிறது என்பது தெளிவாய் இல்லையென்றால், அந்த ஆய்வு சேர்க்கப்பட கூடாது).
 5. ஆய்வு அறிக்கையானது ஒரு சரியிணை-ஒப்பான திறனாய்வு பத்திரிக்கையில் ஒரு முழு உரை ஆய்வு அறிக்கையாக (சுருக்கவுரை அல்ல) இருத்தல் வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு மருத்துவ சோதனையை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.

முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை சேர்ப்பதற்கான சேர்க்கை திட்ட அளவைகள்

பிசியோதெரபி தலையீடுகளை மதிப்பிட்ட முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளும் PEDro-வில் காப்பகப்படுத்தப்படுகின்றன. முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள், (சொற்தொகுதி முரண்பட்டு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், மெட்டா- பகுப்பாய்வுகள் என்று அழைக்கப்படுகிறது) சார்பு நிலையை குறைப்பதற்கான செயல்முறைகளைக் கொண்டிருப்பதன் மூலம், பாரம்பரிய (“விளக்க “) திறனாய்வுகளில் இருந்து வேறுபடுகின்றன. PEDro-வில் சேர்ப்பதற்கான தகுதியுடையவைகள் மற்றும் அவ்வாறு இல்லாதவைகள் என்று முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை வேறுபடுத்தி அறிய கீழ்க்கண்ட திட்ட அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன:

 1. திறனாய்வு, தேடல் உத்தியை மற்றும் சேர்க்கை திட்ட அளவைகளை விவரிக்கும் ஒரு செயல் முறை பகுதியை கொண்டிருக்க வேண்டும்.
 2. திறனாய்வில், PEDro-வில் சேர்ப்பதற்கான திட்ட அளவைகளை திருப்திபடுத்துகிற குறைந்தபட்சம் ஒரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டல் (அல்லது வெளிப்படையாக தேடியும், ஆனால் ஒரு சோதனை, ஆய்வு அல்லது வழிகாட்டு கண்டுபிடிக்க முடியாமல் போவது) சேர்க்கப்பட வேண்டும்.
 3. ஆய்வு அறிக்கையானது ஒரு சரியிணை-ஒப்பான திறனாய்வு பத்திரிக்கையில் ஒரு முழு உரை ஆய்வு அறிக்கையாக (சுருக்கவுரை அல்ல) இருத்தல் வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.

ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களை சேர்ப்பதற்கான சேர்க்கை திட்ட அளவைகள்

கீழ்க்கண்ட சேர்க்கை திட்ட அளவைகளை திருப்தி செய்கிற ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் சேர்க்கப்படும்:

 1. ஒரு ஆரோக்கிய வல்லுனர் சங்கம் அல்லது சமூகம், பொது அல்லது தனியார் அமைப்பு, ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பு அல்லது திட்டம் அல்லது அரசு நிறுவனம் ஆதரவின் கீழ் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டல் தயாரிக்கப்படுகிறது. மேற்கூறிய அமைப்புகள் ஏதேனும் ஒன்றால் அதிகாரபூர்வமாக வழங்கப்படாமல் அல்லது ஆதரவளிக்கப்படாத ஒரு தனிநபர் அல்லது குழு மூலம் தயாரிக்கப்பட்டு மற்றும் வெளியிடப்படும் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டல் PEDro-விற்கான சேர்க்கை திட்ட அளவைகளை சந்திப்பதில்லை.
 2. மருத்துவ நடைமுறை வழிகாட்டல் பொதுவில் கிடைக்கிறது.
 3. ஒரு முறைப்படுத்தப்பட்ட இலக்கிய தேடல் மற்றும் சரியிணை-ஒப்பானவர் திறனாய்வு பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை திறனாய்வு செய்தல் ஆகியவை ஒரு வழிகாட்டல் தயாரிப்பின் போது செய்யப்படும் அல்லது வழிகாட்டல்கள் வெளியீட்டிற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை அடிப்படையாக கொண்டிருந்தன.
 4. முறைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட சொற்தொடர்களை கொண்ட பரிந்துரைகளை, உத்திகள், அல்லது தகுதியான ஆரோக்கிய பராமரிப்பு பற்றிய முடிவுகள் எடுக்க வழிக்காட்டும் தகவல் ஆகியவற்றை மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கொண்டிருக்கும்.
 5. தற்போது ஒரு பிசியோதெரபி நடைமுறை பயிற்சியாகவோ அல்லது பிசியோதெரபி நடைமுறை பயிற்சி ஆக முடிய கூடியதான ஒரு தலையீட்டின் மேலாவது, ஏதாவது ஒரு பரிந்துரையாவது அக்கறைக் கொண்டிருக்க வேண்டும்.
 6. பிசியோதெரபி பரிந்துரைகள் குறைந்தது ஒரு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை அல்லது பிசியோதெரபி தொடர்பான முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை அடிப்படையாக கொண்டவை ஆகும்.

பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டலை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.

2. குறியீடுகள்

துணைப் பிரிவு

இந்த பிரிவுகள் பிசியோதெரபியின் பல்வேறு அம்சங்களை குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆய்வு அறிக்கைக்கான பகுதி, இவை எவற்றின் கீழும் பொருந்தவில்லை எனில், “இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

இதய-சுவாசவியல்
கடுமையான மற்றும் புனர்வாழ்வு இதய-சுவாசவியல் தலையீடுகள் அல்லது இதய-சுவாச மண்டலத்தை பாதிக்கும் நிலைமைகளின் மேலான உடற்திறன் பயிற்சி ஆகியவற்றை மதிப்பீடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கியும். ஆனால், வரையறை அற்றதுமாய் உள்ளது. இந்த துணைப்பிரிவு, நோயாளி மக்கள் மத்தியிலான பொது உடற்பயிற்சி பயிற்றுவிப்பு ஆய்வுகளை உள்ளடக்கவில்லை. ஆரோக்கியமான மக்களுக்கான பொது உடற்பயிற்சி பயிற்றுவிப்பு ஆய்வுகளை PEDro-வில் வகைப்படுத்தப்படவில்லை

சிறுநீர் அடக்கம் மற்றும் மகளிர் நலம்
ஆண் மற்றும் பெண் சிறுநீர்-அடங்காமை மற்றும் தாய்க்கான பிரசவத்திற்கு முன் மற்றும் பின்னான தலையீடுகளை உள்ளடக்கியும் ஆனால், வரையறை அற்றதுமாய் உள்ளது

உழைப்பில் உடலியக்கம் மற்றும் தொழில்சார்ந்த நலம்
வேலைத் தளங்களை அல்லது வேலை-தொடர்பான நிலைமைகளைக் கொண்ட தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட தலையீடுகளை உள்ளடக்கியும் ஆனால், வரையறை அற்றதுமாய் உள்ளது

மூப்பியல்
ஆய்வுக்குள்ளான மக்களின் சராசரி வயது 60-க்கு மேற்பட்டதை கொண்டனவும் மற்றும் பொதுவாக வயதான மக்களை பாதிக்கும் நிலைமைகள் (எ.கா., கீல்வாதம்) மீதான ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

தசையெலும்பு கூட்டமைப்பு
கீழ் முதுகு வலி, முடக்குவாதம், நரம்பு சிக்குதல் கூட்டு அறிகுறிகள், நரம்புவலி ஆகியவற்றை உள்ளடக்கியும் ஆனால், வரையறை அற்றதுமாய் உள்ளது

நரம்பியல்
வலி அல்லது கூச்ச உணர்வு ஆகியவற்றை முதன்மை வெளிப்பாடுகளாகக் கொண்ட மணிக்கட்டு குகைஇறுக்க நோய், நரம்பு வலி அல்லது இடுப்பு நரம்பு வலி போன்றவற்றை தவிர்த்து, மைய மற்றும் சுற்று நரம்புத் அமைப்புகளின் நசிவுகளை உள்ளடக்கியும் ஆனால், வரையறை அற்றதுமாய் உள்ளது

புற்று நோயியல்
கட்டிகள் அல்லது புற்றுநோய்கள் காரணமாக ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கான தலையீடுகளை மதிப்பீடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

எலும்பியல்
எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பியல் அறுவைச் சிகிச்சைக்கு முன் அல்லது பின்னான தலையீடு எ.கா. முழங்கால் மாற்றுகள், தசைநார் சீரமைப்பு ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கும்

குழந்தை மருத்துவம்
ஆய்வுக்குள்ளான மக்களின் சராசரி வயது 16-க்கு குறைவானதை கொண்டனவும் மற்றும் பொதுவாக குழந்தைகளைப் பாதிக்கும் நிலைமைகள் (எ.கா., சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்) மீதான ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

விளையாட்டு
விளையாட்டு காயங்களுடன், பொதுவாக விளையாடும் மக்களை பாதிக்கும் நிலைமைகளை குறிப்பாக விளக்கும் (எ.கா., தசைநார் சீரமைப்பு) ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை

தலையீடு

இந்த பிரிவுகள் பிசியோதெரபி தலையீட்டை பரந்த அளவில் உள்ளடக்கும். ஒரு குறிப்பிட்ட ஆய்வு அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட தலையீடு இவை எவற்றின் கீழும் பொருந்தவில்லை எனில், “இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

குத்தூசி சிகிச்சை
நடவடிக்கை திருத்தம்
கல்வி
மின்சிகிச்சை, வெப்பம், குளிர்
உடற்திறன் பயிற்றுவிப்பு
ஆரோக்கிய மேம்பாடு
நீர்சார் சிகிச்சை, குளியல் மருத்துவம்
நரம்பு வளர்ச்சி சிகிச்சை முறை, நரம்புதூண்டல்
சிம்புகள், ஒட்டு பட்டைகள், தாள்பட்டைகள்
சுவாச சிகிச்சை முறை
திறம் பயிற்றுவிப்பு
தசை வலிமை பயிற்சி
தசை நீட்டல், இயக்கவியல், கையாள்வு சிகிச்சை, நீவுதல் சிகிச்சை
இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை

பிரச்சினை

பிசியோதெரபிஸ்ட்களளால் சிகிச்சையளிக்கப்படும் பரந்த அளவிலான பிரச்சினைகளின் பிரிவுகளை உள்ளடக்க இந்த பிரச்சினை பட்டியல் உருவாக்கப்பட்டது. பிரச்சனையானது, பிசியோதெரபி தலையீட்டின் மட்டத்தில் விளக்கப்பட்டு உள்ளதை குறிப்பில் கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட ஆய்வு அறிக்கையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிரச்சனை, இவை எவற்றின் கீழும் பொருந்தவில்லை எனில், “இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

கடினமான சளி இளக்கம்
பலவீனம்
ஆற்றல் குறைவான காற்றோட்டம்
சிறுநீர் அடங்காமை
இயக்க இணக்கமின்மை
தசை நீளம் குறுகுதல், குறைவான மூட்டு இணக்கம்
தசை பலவீனம்
திரவக் கோர்வை
வலி
குறைவான உடற்பயிற்சி சகிப்புத்தன்மை
குறைவான வேலை சகிப்புத்தன்மை
தோல் நசிவு, புண், தீக்காயம்
இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை

உடற்பாகம்

இந்த பிரிவுகள், சிகிச்சையளிக்கப்படும் உடற்பாகத்தை குறிப்பிடுகின்றன. ஒரு உடற் பாகம் சிகிச்சையளிக்கபடாமல், அல்லது ஒரு உடற்பாகத்தை அல்லாமல் முழு உடல் அமைப்புகளை இலக்காக கொண்ட ஒரு தலையீடு (உதாரணமாக, ஒரு பக்கவாதத்தை தொடர்ந்த நடைபயிற்சி) இருக்கும் எனில், “இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

தலை அல்லது கழுத்து
மேற்கரம், தோள் அல்லது தோள் வளையம்
முன்கரம் அல்லது முழங்கை
கை அல்லது மணிக்கட்டு
நெஞ்சு (இதய-சுவாச சோதனைகளுக்கானது)
நெஞ்சு தண்டெலும்பு
கீழ் முதுகு தண்டெலும்பு, திரிக-பின் இடுப்பு மூட்டு அல்லது இடுப்புக் கூடு
கரவிடம் அல்லது இனபெருக்க-சிறுநீரக அமைப்பு
தொடை அல்லது இடுப்பு மூட்டு
கீழ்ப் பகுதி கால் அல்லது முழங்கால்
பாதம் அல்லது கணுக்கால்
இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை

தலைப்பு

இந்த பிரிவுகள், பிசியோதெரபிஸ்ட்கள் சிகிச்சையளிக்கும் குறிப்பிட்ட மக்கள் தொகைகளைக் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆய்வு அறிக்கையின் தலைப்பு, இவை எவற்றின் கீழும் பொருந்தவில்லை எனில், “இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை” என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

பெருமூளை வாதம்
பெருமூளை வாத மேலாண்மையை மதிப்பிடும் ஆய்வு கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது

நாள்பட்ட வலி
தசையெலும்பு கூட்டமைப்பு அல்லது நரம்பியல் மூல தொடக்கமான நாள்பட்ட வலி உட்பட நாள்பட்ட வலி மேலாண்மையை மதிப்பிடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

நாள்பட்ட சுவாச நோய்
நுரையீரல் இடைத்திசு நோய், நுரையீரல் மூச்சுக் குழாய் தளர்ச்சி நோய், மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகிய நாள்பட்ட சுவாச நோய் மேலாண்மையை மதிப்பிடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

நரம்பியல் காயம்
தண்டுவட அல்லது மூளைக் காயங்கள் மேலாண்மையை மதிப்பிடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

கழுத்து சுளுக்கு
கழுத்து சுளுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மேலாண்மையை மதிப்பிடும் ஆய்வு அறிக்கைகளை உள்ளடக்கும்

இந்த துறையில் பொருத்தமான மதிப்பு இல்லை

PEDro குறியீடுகள் பதிவிறக்கம்

பிடிஎப் கோப்பு பதிவிறக்கம் செய்க (பிசி/மேக்)

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்