PEDro கூட்டாண்மை, பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவால் 1999-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தற்போது, சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மஸ்குலோ-ஸ்கில்ட்டல் ஹெல்த்-ல் உள்ளது. PEDro கூட்டாண்மையின் பணி, கிடைக்கும் சிறந்த ஆதாரத்தை மருத்துவ பயன்பாட்டுக்கு வழிவகுப்பதன் மூலம் பிசியோதெரபி சேவைகளின் செயல்திறனை அதிகரிப்பதாகும். PEDro கூட்டாண்மை, “பயனுள்ள பிசியோதெரபியானது, மக்கள் சார்ந்தது, தடுப்பு நோக்குடையது, பாதுகாப்பானது, தொழில்நுட்ப திறமை வாய்ந்தது, மற்றும் சிறந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்து, திறமையாக நிர்வகிக்கப்படுவது” என்பதை நம்புகிறது.
PEDro கூட்டாண்மை, பிசியோதெரபி ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் பயனுள்ள பிசியோதெரபியை செயல்படுத்தவும், கீழ்காணும் அமைப்புகளின் ஆலோசானைப்படி ஒரு இலாப-நோக்கற்ற அமைப்பாக செயல்படுகிறது:
- தொழில்முறை நிறுவனங்கள் (World Physiotherapy-ன் உறுப்பினர் அமைப்புக்கள் உட்பட)
- பிசியோதெரபி சேவைகளை வாங்கியவர்கள் (மூன்றாம் தரப்பு நபர்கள் மற்றும் பணியாளரின் இழப்பீடு சீரமைக்கும் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் ஆரோக்கிய நிதிகள் உட்பட)
- பிசியோதெரபி சேவை வழங்கியவர்கள் (பிசியோதெரபி துறைகள், பகுதி சுகாதார அதிகார அமைப்புகள் மற்றும் தனியார் பயிற்சியாளர்கள் உட்பட)
- பிசியோதெரபி பதிவு மற்றும் உரிமம் அதிகாரிகள்
- பிசியோதெரபி படிப்பு திட்டங்கள், மற்றும்
- நுகர்வோர் நலன்களை பிரதிநித்துவம் செய்யும் குழுக்கள்.
கிடைக்க பெறும் சிறந்த ஆதாரத்தை, வழக்கமான பிசியோதெரபி மருத்துவ நடைமுறையில் பயன்படுத்துவதற்கு பல தடைகள் உள்ளன. இத்தகைய தடைகளை கடக்க உதவும் பல்வேறு சேவைகளை PEDro கூட்டாண்மை வழங்குகிறது:
- ஆதாரத்தை அணுகுதல்: PEDro கூட்டாண்மையானது, PEDro, Physiotherapy Evidence Database மற்றும் Diagnostic Test Accuracy database (DiTA) தரவுத்தளங்களை பராமரிக்கிறது. PEDro என்பது சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் பிசியோதெரபியில் உள்ள ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு தரவுத்தளம் ஆகும். DiTA என்பது பிசியோதெரபி சார்ந்த நோய் கண்டறிதலின் நுட்பம் சம்பந்தமான முதன்மை ஆய்வுகள் மற்றும் திறனாய்வுகளின் தரவுத்தளமாகும். இவை இரண்டும், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் பிறருக்கும், சிகிச்சை பலாபலன் மற்றும் நோய் கண்டறிதல் பரிசோதனைகளின் நுட்பம் பற்றிய சிறந்த ஆதாரத்தை விரைவாக அணுகுவதற்கு அமைக்கப்பட்டுள்ளன.
- விமர்சன மதிப்பீடு: PEDro-வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், PEDro அளவை கொண்டு தர மதிப்பீடு செய்யப்படுகின்றன. மருத்துவ ஆராய்ச்சி குறித்த விமர்சன மதிப்பீட்டு திறமைகளை பயனர்கள் பெறுவதற்காக, PEDro கூட்டாண்மை, ஆன்லைன் PEDro அளவை பயிற்சி திட்டத்துடன் விரிவுரைகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது.
- நடைமுறைப்படுத்தல்: சிகிச்சை விளைவுகள் பற்றிய தெளிவான ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கூட, ஆதாரம்-சார்ந்த நடைமுறையை செயல்படுத்துதல், குறிப்பாக, அவை தற்போதைய நடைமுறை ஆதாரத்திற்கு எதிராக இருந்தால் கடினமாக இருக்க முடியும். PEDro கூட்டாண்மையானது, தனிநபர்கள் மற்றும் குழுக்களோடு இணைந்து பணி செய்வதன் மூலம் பயனுள்ள ஆரோக்கிய பராமரிப்பு செயல்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்கிறது. மருத்துவத் துறை சேவைகளில் நடத்தை மாற்றம் ஏற்படுத்த கூடியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ள செயல்படுத்தல் உத்திகளை தேர்ந்தெடுக்க, PEDro கூட்டாண்மை அவர்களுக்கு உதவ முடியும்.